வற் வரி அதிகரிப்பு கொள்கை – 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, December 21st, 2023

வற் வரி அதிகரிப்பு கொள்கை  2024 ஆம்  ஆண்டு காலப்பகுதியில் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும்  எனவும், வரி அதிகரிப்பு பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வரி அதிகரிப்பு தொடர்பான ஊடக அறிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  எதிர்வரும்  தேர்தல் மூலம்  நிலையான அரசாங்கத்தை அமைப்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதன்மையான கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற போதிலும்,  தற்போதைய அரசாங்கத்தின் தலைவரும் அரச தலைவரும் அந்தக் கட்சியின் கொள்கையிலிருந்து வேறுபட்ட கொள்கையைப் பின்பற்றும் அரசியல் கட்சியின் தலைவரே எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


வடக்கில் இராணுவம் இருக்க மக்கள் விரும்புகின்றனர் கூட்டமைப்பு மட்டுமே அகற்றக் கோருகிறது - முன்னாள் அம...
கிரீஸ் ரயில் விபத்து - நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர் - ஏதென்ஸில் வன்முறையில் ஈடுபட்ட ...
கடந்த ஓராண்டில் மாத்திரம் சுமார் பத்து இலட்சம் மின்சார இணைப்புகள் துண்டிப்பு - காமினி வலேபொட தெரிவிப...