இலங்கையின் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா!

Tuesday, July 17th, 2018

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ திட்டம் இலங்கை வருமானத்தை அதிகரிக்கச் செய்வதுடன் ஏற்றுமதித் துறையையும் இரட்டிப்பாக்கும் என்று கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட பொறியியல் துறை விரிவுரையாளர் கலாநிதி எம். கணேசமூர்த்தி தெரிவித்தார்.
குறித்த திட்டத்தின் கீழ் 10 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியுமெனவும், இது ‘விஷன் 2025’ தொலை நோக்குத் திட்டமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கடன் திட்டம் 6 வகை பிரிவின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றது. கடன், வட்டி மானிய அடிப்படையில் அரச மற்றும் தனியார் வங்கிகள் மூலம் இதற்கான கடன்கள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ திட்டத்தில் நிதி மற்றும் நிதியல்லாத உதவிகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
மேலும் சிறிய மற்றும் நடுத்தர தனிநபர் முதலீடும் முயற்சியாண்மையும் இதன் மூலம் முன்னெடுக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதே இதன் நோக்கம் என்றும் கலாநிதி எம். கணேசமூர்த்தி தெரிவித்தார்.

Related posts: