இலங்கையின் கடன் மறுசீரமைப்பிறகு சீனா ஆதரவு – 2.9 பில்லியன் டொலர் கடனுதவி உறுதியானது!
Tuesday, March 7th, 2023
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவியை பெறுவதில் உள்ள தடையை நீக்கி, இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.
இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக உள்ள சீனா, எக்ஸிம் வங்கி ஊடாக கடன் மறுசீரமைப்பிற்கான எழுத்து மூலமான ஆதரவை வழங்கியுள்ளதாக ப்ளூம்பேர்க் தெரிவித்துள்ளது.
2.9 பில்லியன் டொலர் பெறுமதியான கடனுதவியை பெற்றுக்கொள்வதற்கான இந்த உத்தரவாத இந்த கடிதம் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை இம்மாதத்திற்குள் கிடைக்கும் என ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கை அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பெண் சட்டத்தரணி மீது சிறைக் காவலர்கள் நீதிமன்றில் முறையீடு!
கிழக்கு மாகாணத்தை ஆட்டம் காணச் செய்தது கொரோனா: ஒரே நாளில் 27 பேருக்கு தொற்றுறுதி – எச்சரிக்கிறார் சு...
வருடாந்த இடமாற்ற நடைமுறையின் கீழ் 118 நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம் - நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவிப...
|
|
|


