அரிசி தட்டுப்பாடு குறித்து போலியான பீதியை ஏற்படுத்தி விலையை அதிகரிக்க சூழ்ச்சி – விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா எச்சரிக்கை!

Monday, June 13th, 2022

அரிசி தட்டுப்பாடு என போலியான பீதியை ஏற்படுத்தி அரிசி விலையை அதிகரிக்க சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியமில்லை என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த பெரும்போகம் மற்றும் சிறு போக நெல் உற்பத்தியானது எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கு போதுமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை சிறு போகத்தில் 465,000 ஹெக்டயரில் நெல் பயிரிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே 90 வீதமான பயிரிடும் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்போகத்தின் 2022-23 ஆம் ஆண்டுக்கான பெரும்போக விளைச்சல் மார்ச் மாத இறுதி வாரமளவில் கிடைக்கப் பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் நெல் இறக்குமதி செய்ய நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூடுதல் அளவில் நெல் மற்றும் அரிசியை களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தடுக்க அவற்றை சந்தைக்கு வெளிவிடுமாறு கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: