ஐ.நா. வின் விசேட பிரதிநிதிகள் இருவர் இன்று இலங்கை வருகை

Friday, April 29th, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகள் இருவர் இன்று இலங்கை வருகைதரவுள்ளனர்.

நீதவான்கள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனத்தன்மை தொடர்பிலான ஐநாவின் விசேட பிரதிநிதி மொனிக்கா பின்டோவும், சித்திரவதைகள், குரூர நடவடிக்கைகள், மனிதாபிமானமற்ற தண்டனைகள் தொடர்பிலான விசேட பிரதிநிதி ஜுவான் மென்டோஸ் ஆகியோரே இன்று வரவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே ஐநா விசேட பிரதிநிதிகள் இருவரும் நாட்டிற்கு வருகை தரவுள்ளதுடன், அவர்கள் எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என்றும் இந்த விஜயத்தின்போது அமைச்சர்கள், அரசாங்கத்தின் விசேட பிரதிநிதிகள், சட்ட மாஅதிபர், சட்டத்தரணிகள், சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ஐநா விசேட பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.

வடக்கு, கிழக்க, வட மத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கும் அவர்கள் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபடவுள்ளனர்.

தங்களின் இலங்கைக்கான விஜயத்தின் நிறைவில், விசேட செய்தியாளர் மாநாடு ஒன்றையும் கொழும்பில் நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Related posts: