இலங்கையர்களை மீட்கத் தயார் – எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க!

கடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பலை மீட்க அரசாங்கம் சட்ட ரீதியாக கோரிக்கை விடுத்தால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், தான் இந்தப் பிரச்சினையில் தலையிடத் தயாராக இருப்பதாக, எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத தெரணவுக்கு வழங்கிய விஷேட செவ்வியின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 2011 – 2016ம் ஆண்டு வரை கடற் கொள்ளையர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த அனுபவத்தைக் கொண்டு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் கூறியுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், தமது பாதுகாப்பு திட்டங்கள் இரகசியமானவை என்பதால் அவற்றை தற்போது வௌியிட முடியாது எனவும், அவ்வாறு கூறிவிட்டால் மாற்று திட்டங்களை எதிரிகள் வகுத்து விடலாம் எனவும் நிஸ்ஸங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களைக் காப்பாற்ற கடற் பாதுகாப்பு நிறுவனம் என்ற ரீதியில் நாம் முன்னிற்போம், ஆனால் அரசாங்கம் எழுத்து மூலம் சட்ட ரீதியாக இது தொடர்பில் கோர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|