பகிடிவதையின் கொடூரம் – யாழில் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற மாணவன்!
Saturday, December 29th, 2018
யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி வளாகத்தில் கற்கும் மாணவனே தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவர் பளை பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
குறித்த மாணவன் நேற்று மாலை வீட்டிலிருந்தவர்களிடம் பல்கலைகழகத்தில் தான் மோசமான பகிடிவதைக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் தனது அறைக்குள் சென்று கழுத்தை அறுத்துள்ளார். அதனை அவதானித்த வீட்டிலிருந்தோர் மாணவனை உடனடியாக மீட்டு பளை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பளை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
எதிர்வரும் திங்கள்முதல் வழமைக்கு திரும்பும் பேருந்து சேவைகள் - இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!
இலங்கையில் ஒரு கோடியே 18 இலட்சத்து 241 பேருக்கு தடுப்பூசி பெற்றுள்ளனர் - தொற்றுநோயியல் பிரிவு அறிவிப...
சமுர்த்தி உள்ளிட்ட மானியங்களுக்கான விண்ணப்பம் இன்றுடன் நிறைவு - நலப்பணிகள் திணைக்களம் அறிவிப்பு!
|
|
|


