குளங்களைப் பார்வையிடச் செல்வோர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி உயிராபத்தை தவிர்த்துக் கொள்ளவும் – பொலிஸார் எச்சரிக்கை!

Tuesday, December 11th, 2018

கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக்குளம் உள்ளிட்ட பாரிய மற்றும் நடுத்தர சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் நிரம்பியுள்ளதனால் இவ்வாறான குளங்களைப் பார்வையிடுவதற்குச் செல்வோர் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி உயிராபத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளமான இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 36 அடியாக உயர்வடைந்து மேலதிக நீர் வான்கதவுகளால் வெளியேற்றப்படுகின்றது.

இந்த நிலையில் குளங்களைப் பார்வையிட வருவோர் பாதுகாப்பற்ற வீதிகளில் இப் பகுதிகளில் நீராடுதல், மீன் பிடித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளவும். நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திலிருந்து குளத்தைப் பார்வையிடுவதற்குச் சென்ற சாவகச்சேரியைச் சேர்ந்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்துக் குளங்களும் நீர் நிரம்பிக் காணப்படுவதுடன் வான்பாய்கின்றன.

இவ்வாறு இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களைப் பார்வையிடுவதற்குச் செல்வோர் அவதானமாகச் செயற்படுமாறும் குளத்தின் ஆபத்தான பகுதிகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: