இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் வந்தடைந்தன!
Monday, October 25th, 2021
இலங்கைக்கு மேலும் 3 இலட்சத்து 5 ஆயிரத்து 370 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன என இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் சட்டத்தரணி தினுச தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்தத் தடுப்பூசி தொகுதி நெதர்லாந்திலிருந்து கட்டார் ஊடாக இன்று திங்கட்கிழமை அதிகாலை நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், குறித்த தடுப்பூசி தொகுதி தற்போது இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அமைச்சுக்களை வசப்படுத்திய வடக்கின் முதல்வர்!
கல்வி அமைச்சின் உயர் பதவிகளில் அதிரடி மாற்றங்கள் - அமைச்சர் அகிலவிராஜ் நடவடிக்கை!
கடந்த ஆண்டு இலங்கைக்கு மில்லியன் டொலருக்கும் அதிகமான புதிய உதவிகளை அமெரிக்கா வழங்கியதாக இலங்கைக்கான ...
|
|
|


