கல்வி அமைச்சின் உயர் பதவிகளில் அதிரடி மாற்றங்கள் – அமைச்சர் அகிலவிராஜ் நடவடிக்கை!
Monday, December 5th, 2016
கல்வியமைச்சின் ஒருசில உயர் பதவிகளில் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளார். அதன்படி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளராக இருந்த மதுரா வேஹெல்ல மேலதிக செயலாளராகவும், மேலதிக செயலாளராக இருந்த ஹேமந்த பிரேமதிலக்க சேவை நிறுவன மேலதிக செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
அவ்வாறே இதுவரை சேவை நிறுவன மேலதிக செயலாளராகப் பணிபுரிந்த கே.பி.இலங்கசிங்க கல்வி வெளியீட்டுப் பணிப்பாளர் நாயகமாகவும் மாற்றப்பட்டுள்ளார்.
இந்த மாற்றங்கள் அனைத்தும் கடந்த வெள்ளிக்கிழமை (2ஆம் திகதி) முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக கல்வியமைச்சு தெரிவித்திருக்கிறது.

Related posts:
நீர் வழங்கல் வடிகாலமைப்பு ஒன்றிணைந்த கூட்டமைப்பு எச்சரிக்கை!
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை - தீவக மக்கள் அவலம்!
இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கு சீனாவின் எக்ஸிம் வங்கி இணக்கம் - நிதி இராஜாங்க அமைச்சர...
|
|
|
நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு மூன்று இலக்குகளை அடைய வேண்டும் - நிதி இராஜாங்க அம...
நாடு என்ற ரீதியில் வாழும் உரிமை பலஸ்தீனத்துக்கும் உள்ளது - இப்போது அங்கு நடப்பது போர்க்குற்றமே” என எ...
பொருளாதார நெருக்கடிகளுடன் வாழ்ந்துவரும் மாணவர்களுக்கு அமைச்சரால் வழங்கப்பட்ட உதவியானது காலமறிந்து செ...


