ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை – தீவக மக்கள் அவலம்!

Saturday, January 2nd, 2021

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை வைத்தியர் பற்றாக்குறை தீவக மக்கள் மருத்துவ தேவைகளை உரிய நேரத்தில் பெற முடியாத அவலத்தை எதிர்நோக்குவதாக பொது வைத்தி ய நிபுணர் கல்பனா சிறிமோகனன் கவலை வெளியிட்டுள்ளார்.

வைத்தியசாலை கதிரியக்கப் பிரிவு ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து தனது தீவக மக்கள் படும் மருத்துவ நெருக்கடிகளை மிகுந்த மன உளைச்சலுடன் எடுத்து உரைப்பதாகக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்

ஒரு வருடமாக எந்தவொரு மருத்துவரும் தனக்கு பிரத்தியேகமாக நியமிக்கப்படாத நிலையில் மருத்துவ நிபுணர் ஆகிய தான் எந்த அடிப்படை வசதிகளுமின்றி கடமையாற்றி வருவதாகவும் 15 வைத்தியர்கள் இருக்க வேண்டிய ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் 5 வைத்தியர்களே கடமையாற்றுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஏனைய கடல் கடந்த தீவுகளில் இருந்து வைத்திய சேவைக்கு வருபவர்களுக்கு உரிய மருத்துவ வசதியை வழங்காது விடும் போது அந்த வறிய மக்களின் நிலை குறித்து தான் மிகுந்த கவலை அடைவதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில் மருத்துவ நிபுணர் கல்பனா இன்னொரு வைத்திய நிபுணர் வரும் வரை யாழ். போதனா வைத்தியசாலையில் கடமை பொறுப்பேற்க தேவையில்லை தொடர்ந்து ஊர்காவற்றுறையில் பணியாற்றலாம் என்று உறுதியளித்திருந்தமை குறிப்பிட்த்தக்கது.

Related posts: