இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா – வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ் சந்திப்பு – வடக்கு மாகாணத்துக்கான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் உறுதியளிப்பு!
Sunday, January 21st, 2024
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள், அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது ஆளுநரால் இந்திய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவிபுரியும் என தெரிவித்த உயர்ஸ்தானிகர், விசேடமாக வடக்கு மாகாணத்துக்கான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
48 வகை மருந்து வகைகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் நோயாளர்களுக்கு 4.4 பில்லியன் ரூபா நிவாரணம்!
நீரை விற்கவோ அல்லது தனியார்மயமாக்கவோ எவ்விதத் திட்டமும் இல்லை - மைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!
பாதாள உலகக் குழுக்களை முழுமையாக ஒழிக்க தீவிர நடவடிக்கை - பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் த...
|
|
|


