இறக்குமதி வரி குறைப்பு – உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு பாரிய நட்டம்!

Saturday, January 26th, 2019

உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி குறைந்துள்ள நிலையில் யாழ். மாவட்ட உருளைக்கிழங்குச் செய்கையாளர்கள் பாரிய நட்டத்தை எதிர்நோக்க நேரிடும் என விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கிற்கான உற்பத்திச் செலவு 55 ரூபாய் எனவும் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 50 ரூபாவிற்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

அரசாங்கம் உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரியை 20 வீதமாக குறைத்துள்ளமையே  இந்நிலைமையேற்படக் காரணமென விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

யாழ். மாவட்ட விவசாயிகள் அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் அறுவடை செய்ய இருக்கின்ற நிலையில் தமக்கான உத்தரவாத விலையொன்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெற்றுத்தர நடவடிக்கையெடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: