இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்த இணைந்து பயணிக்க தயார் – ஜோ பைடனுக்கு பிரதமர் மஹிந்த வாழ்த்து!

Sunday, November 8th, 2020

அமெரிக்காவுடன் உறவுகளை மேம்படுத்த  புதிய ஐனாதிபதியுடனும்  உப ஐனாதிபதியுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கும் உப ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட  கமலா ஹரிஸுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று ட்விட்டர் சமூக வலைத்தளம் ஊடாக  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான 72 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நாங்கள் குறிக்கும்போது, எங்கள் இரு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில்  ஸ்ரீலங்கா – அமெரிக்கா உறவுகளை மேலும் மேம்படுத்த உங்கள் இருவருடனும் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறேன் என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்பை தோற்கடித்து, ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ள நிலையில், ஜோ பைடன் 290 வாக்குகளைப் பெற்று அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்வாகியுள்ளார்.

அதே வேளையில் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தெரிவாகி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வரலாறு படைத்துள்ளார்.

தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட  முதல் ஆப்ரிக்க-அமெரிக்க பெண் துணை அதிபர் என்ற பெருமையையும் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். இவர்களது இந்த வெற்றிக்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: