குடாநாட்டில் ஜனநாயக சூழ்நிலையை தோற்றிவித்தவர்கள் நாம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Wednesday, February 15th, 2017

யாழ் குடாநாடு இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்துவந்த காலப்பகுதியில் இங்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் ஒரு ஜனநாயக சூழலை  தோற்றுவித்தவர்கள் நாம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் இன்றையதினம் இடம்பெற்ற காரைநகர் பிரதேசத்தின் வட்டார செயலாளர் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

1995 ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டை சூரியக்கதிர் நடவடிக்கை மூலம் யாழ் குடாநாட்டை படைத்தரப்பினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தருந்தனர்.

அதன்பின்னராக தென்மராட்சி வடமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் படிப்படியாக மீளக்குடியேறி இருந்தனர். இக்காலப்பகுதியில் குடாநாடு தழுவிய ரீதியில் பயமும் பீதியும் நிறைந்த நிலையில் மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஈ.பி.டி.பியினராகிய நாம் தீவகப்பகுதியில் ஜனநாயக வழிமுறை ஊடாக  மக்களுக்கான அரசியல் பணிகளை முன்னெடுத்து வந்திருந்தோம்.

பின்னர் யாழ் குடாநாட்டில் அவலப்படும் மக்கள் மத்தியில் எமது அரசியல் பணிகளை முன்னெடுக்கும் பொருட்டு எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் நேரடி நெறிப்படுத்தலுடனும் வழிகாட்டலுடனும் மக்களுக்கான பணிகளை முன்னெடுத்துவந்தோம்.

இக்காலப்பகுதியில் மக்களுக்கான சேவைகளை மேற்கொண்டிருந்த எமது கட்சித் தோழர்கள் பலர் பலிகொள்ளப்பட்டதுடன் பாதிப்புக்களையும் எதிர்கொண்டிருந்தனர்.

இவ்வாறான இழப்புக்கழுக்கும் அவலங்களுக்கும் மத்தியில் நாளாந்தம் பயப்பீதியில் வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் மத்தியில் ஒரு ஜனநாயக சூழலை தோற்றுவிப்பதில் இடர்களை கடந்தும் நாம் ஜனநாயக சூழ்நிலையை உருவாக்கி வெற்றி கண்டிருந்தோம்  என தெரிவித்தார்.

கட்சியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளர் வீரமுத்து கண்ணன் (ரஜனி) தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்  , கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கட்சியின் அலுவலக நிர்வாகச் செயலாளர் வசந்தன்  உடனிருந்தனர்.

02

Related posts: