ஊரடங்கு சட்ட நடைமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் : அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவிப்பு!

Thursday, June 4th, 2020

நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணிமுதல் எதிர்வரும் சனிக்கிழமை 6 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டம் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதுடன் அன்றுமுதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல்வரை முன்னர் போன்று இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாவதனால், இன்றையதினம் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு அறிவித்திருந்தது..

இதேவேளை, நாடுமுழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்கள் மற்றும் உப அஞ்சல் நிலையங்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி தவிர்க்க முடியாத காரணத்தினால் திறக்கப்பட மாவட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் நாடுமுழுவதும் ஊரடங்டகு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் இன்றையதினம் அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் 24 மணிநேர விசேட வீதித் தடை சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இது குறித்த அறிவுறுத்தல் அனைத்து காவல்துறை நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம் அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்த, வீட்டிலிருந்தும், தங்குமிடங்களில் இருந்தும் வெளியேறுவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: