பாரதியஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் விஜயம் – பல்வேறு கலந்துரையாடல்களிலும் பங்கேற்பு!

Monday, May 2nd, 2022

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் நல்லைக் கந்தன் ஆலய வழிபாட்டுடன் யாழ்ப்பாண குடாநாட்டு சந்திப்பு, விஜயங்களை ஆரம்பித்து பல்வேறு பகுதிக்கும் விஜயம் மேற்கொண்டார்

இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த பாஜக கட்சியில் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தனை தமிழ் கலாச்சார முறைப்படி வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார். அத்துடன் நல்லை ஆதீன குரு முதல்வரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதனிடையே யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த அண்ணாமலை இன்று காலை 10 30 மணியளவில் இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தை பார்வையிட்டார்.

இதன்போது கலாச்சார மத்திய நிலையத்தின் அமைக்கப்பட்டிருக்கின்றன விசேட வசதிகள் தொடர்பாகவும் அதன் திறன்கள் தொடர்பாகவும் யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் விளக்கம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது என இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வு நேற்றையதினம் கொட்டகலை சி.எல்.எவ்.வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

மேலும் – இலங்கையை அருகிலுள்ள நாடு, எமது சொந்தங்கள் வாழும் நாடு என இரு கோணத்தில் இந்தியா பார்க்கின்றது. அதனால்தான் நெருக்கடியான கட்டங்களில் உதவிகள் வழங்கப்படுகின்றன.

உயிர்காப்பு மருந்து தேவை என்று சொன்னபோது, 107 வகையான 760 கிலோ மருந்துகளை அனுப்பி வைத்துள்ளோம். எதிர்காலத்திலும் உதவுவோம். மலையக மக்களுக்கான உதவிகளும் தொடரும். நாம் வளரும் அதேவேளை, எமது தொப்புள்கொடி உறவுகளையும் வளர வைப்போம். மலையகம் கல்வியால் உயர வேண்டும். அதற்கான உதவிகளும் தொடரும்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நீண்டகாலத்துக்கானது அல்ல. விரைவில் நிலைமை மாற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

அந்தவகையில் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது.

அன்று ஹனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே இருக்கின்றார்” என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

சனநெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் கொரோனா பரவலின் வேகமும் அதிகரிப்பு - பொது சுகாதார பரிசோதகர்கள் எச்...
மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாததன் விலையை நாடு இன்று அனுபவிக்கிறது - சுகாதார அமைச்சு!
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளன - பொது பாதுகாப்ப...

27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு - எதிர்வரும் 8 ஆம் திகதிமுதல் 3 மாத காலங்களுக்கு நடைமுறையில...
சமுதாய நலன் கருதி மேற்கொள்ளப்படும் செயற்பாட்டில் தோற்றுப்போனால் சமுதாயம் தோற்றுப்போவதாக அர்த்தம் - ய...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம...