இருபது இலட்சம் பேரின் சலுகைக்காக 2 கோடி பேரை கஷ்டத்தில் வீழ்த்துவதா – ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன எம்.பி கேள்வி!

இருபது இலட்சம் பேருக்கு விசேட சலுகைகளை பெற்றுக்கொடுப்பதற்காக 2 கோடி மக்களை கஷ்டத்தில் வீழ்த்த அரசாங்கம் தயாரில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட வேலை நிறுத்தம் வெற்றியளித்ததாக எவராவது கூறுவார்களானால், நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கும் நபராகவே அவர், கருதப்படுவாரெனவும் அவர் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய அவர்,இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – இலட்சத்துக்கு கொடி உயர்த்திய தொழிற்சங்கங்கள், இப்போது நாட்டில் கஷ்டத்தில் வீழ்ந்துள்ள 2 கோடி மக்களையும் பகடைக்காயாக்கியுள்ளது.
நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் கஷ்டத்தில் விழுந்துள்ள மக்களை மேலும் கஷ்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
அது வெற்றிபெற்றுள்ளதாக எவராவது தெரிவித்தால், அந்நபரே, நாட்டின் பொருளாதாரத்தை அழித்தவர் என்றும் அவர் மேலும்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|