யாழ் மாநகரின் ஆளுகைக்குள் உள்ள குளங்கள் அனைத்தும் தூர்வாரப்படு, கழிவுநீர் வாங்க்கால்கள் அனைத்தும் பாரபட்சமின்றி துப்புரவு செய்யப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் இரா செல்வவடிவேல் வலியுறுத்து!

Monday, November 8th, 2021

யாழ் மாநகர பகுதி ஆளுகைக்கள் காணப்படும் அனைத்து குளங்களும் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்படுவதுடன் கழிவு நீர் வடிகால்களும் அனைத்தும் பாரபட்சமின்றி துப்பரவு செய்யப்படுவதுடன் மாநகரின் சுத்தம் சுகாதாரத்தை முன்னிறுத்தி உறுதிமிக்கதான செயற்பாடுகளை மேற்கொள்ள அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா செல்வவடிவேல் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் மாநகரசபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான விசேட அமர்வு இன்றையதினம் இடம்பெற்றது.

இதன்போது அனைத்துக் கட்சிகளினதும் உறுப்பினர்கள் தத்தமது திட்டத்திற்குரிய முன்மொழிவுகள் தொடர்பாக முன்வைத்தனர். இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களும் தமது முன்மொழிவுகளையும் சபையில் முன்வைத்திருந்தனர். இதன்போது இரா செல்வவடிவேலினால் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டது.

மேலும் மாநகரசபையின் ஆளுகைக்கட்பட்ட பகுதிகளில் உள்ள சனசமூக நிலையங்களை மையப்படுத்தியுள்ள விளையாட்டு கழகங்களின் நலன்களை முன்னிறுத்தி அவற்றை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்த பாதீட்டில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன் நகரில் காணப்படும் திண்மக் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி அவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: