இராவணன் கதை தொடர்பாக முறையான விசாரணை நடத்த நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை!

Saturday, August 12th, 2023

இராவணன் கதை தொடர்பாக முறையான விசாரணை நடத்த நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு கலாசார அமைச்சு, மத்திய கலாசார நிதியத்திற்கு அறிவித்துள்ளதாக சபை முதல்வர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்தக் கதை தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன நேற்று நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றியிருந்தார்.

இராவணின் அறிவை நாட்டின் அபிவிருந்திக்கு பயன்படுத்துவதற்காக, பழைமையான வரலாறு தொடர்பான ஆழமான ஆய்வொன்று அவசியமாகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண கோரியிருந்தார்.

இதனிடையே உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, இராவணன் சிங்கள மன்னன் என்றும் அவரது தந்தை மற்றும் பாட்டனார் ஆகியோர் சிங்கள இனத்தவர்கள் எனவும்  . இராவணன் ஒரு தமிழ் அரசன் அல்ல. அவரை ஒரு தமிழராக இங்கு சிலர் காட்டமுயல்கின்றனர் எனவும்  மகாவம்சத்துக்கு முந்திய வரலாற்று ஆவணங்கள் அவர் சிங்கள மன்னன் என்பதை உறுதிப்படுத்துவதாக   தெரிவித்து சர்ச்சசையை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

000

Related posts: