அர்ஜுன் மகேந்திரனின் மேன்முறையீட்டை தள்ளுபடி செய்த இன்டர்போல்!

Friday, August 9th, 2019

தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக இன்டர்போல் பொலிஸாரிடம் அர்ஜுன் மகேந்திரன் செய்த மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தான் கைது செய்யப்படுவதற்கு எதுவித முகாந்திரமும் இல்லை என்றும், தான் கைது செய்யப்படுவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு எதிராக அர்ஜுன் மகேந்திரன் சர்வதேச பொலிஸ் எனப்படும் இன்டர்போல் பொலிஸாரிடம் மேன்முறையீடு செய்திருந்தார்.

தான் எதுவித தவறும் செய்திருக்காத நிலையில் போலியான காரணங்களை முன்வைத்து குற்றப்புலனாய்வு துறையினர் தன்னை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், அதற்காக ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது மேன்முறையீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் சிவப்பு எச்சரிக்கையுடன் இணைக்கப்பட்டிருந்த ஆவணங்களை பரிசோதித்த இன்டர்போல் பொலிஸார் குறித்த சிவப்பு எச்சரிக்கை உரிய நடைமுறைகளின் பிரகாரம் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவித்து அர்ஜுன் மகேந்திரனின் மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்துள்ளனர்.

இத்தகவலை குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.

Related posts: