இராணுவத்தை விமர்சிக்க முடியாது – இராணுவத்தளபதி!

Sunday, October 29th, 2017

 

 

இராணுவத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்றவர்கள் அதன் பின் இராணுவத்தை விமர்சிக்கத் தகுதியற்றவர்கள் என்று இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மரநடுகைத்திட்டத்தை முன்னிட்டு வெலிகந்தை, கந்தகாடு பிரதேசத்தில் இராணுவத்தினரின் மரநடுகை நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

ஒருசில இராணுவ அதிகாரிகள் ஓய்வுபெற்ற பின்னர் தங்கள் சேவைக்காலத்தில் நடைபெற்ற சில சம்பவங்களைக் கொண்டு இராணுவத்தினரை விமர்சிக்கின்றனர்.அவர்கள் பதவியில் இருந்த காலத்தில் அவ்வாறான தவறுகளை திருத்திக் கொள்ள எந்தவொரு நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொண்டிருக்கவில்லை.

அவ்வாறான நிலையில் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இராணுவ அதிகாரிகளோ அல்லது சாதாரண இராணுவத்தினரோ எந்தவொரு நிலையிலும் இராணுவத்தினரை விமர்சிக்க முடியாது.அது பாரிய குற்றமாகவே கருதப்படும் என மகேஷ் சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts: