கொரோனா தொற்று: இரண்டாயிரத்து 463 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

Friday, March 20th, 2020

நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 17 கொரோனா தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இரண்டாயிரத்து 463 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 27 பேர் வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் சிறு குழந்தை ஒன்றும் 23 வயதான இளைஞர் ஒருவரும் அடங்குகின்றனர்.

அத்துடன் வடகொழும்பு போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் அதில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இதனிடையே, அண்மையில் அடையாளங் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான மாணிக்ககல் வர்த்தகரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியார் விமானத்தின் ஊடாக தம்பதிவ யாத்திரைக்கு சென்ற 150 பேர் தற்போது புதுடெல்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் பயணச்சீட்டு இல்லாத காரணத்தால் தாம் நாட்டிற்கு திரும்ப முடியாமல் உள்ளதாக குறித்த குழுவிலுள்ள தேரர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு அறிவித்தார்.

Related posts: