நாட்டைக் கட்டியெழுப்ப விசேட திட்டம் – ஜனாதிபதி

Saturday, June 16th, 2018

சிறந்தவொரு நாட்டையும் சிறுவர்களுக்கு உகந்த தேசத்தையும் கட்டியெழுப்பும் பொறுப்பு மதகுருமார், அரசியல்வாதிகள், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் குறித்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக துரிதமாக அணிதிரள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் ‘கிராமப் புரட்சி’ செயற்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

பெருமளவு நிதி ஒதுக்கீட்டில் நாடளாவிய ரீதியில் சகல கிராம சேவையாளர் பிரிவுகளும் உள்ளடக்கப்படும் வகையில் இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

குறித்த செயற்திட்டத்தின் நோக்கம் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட கிராமிய மக்களுக்கு அபிவிருத்தியின் பலன்களை பெற்றுக்கொடுப்பதேயாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts: