இரயில்வே திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக நியமிக்கப்பட்ட எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார கடமைகளை பொறுப்பேற்பு!

இரயில்வே திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக நியமிக்கப்பட்ட எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
இன்று காலை அவர் தமது பதவியை ஏற்றுக்கொண்டுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்பதாக இரயில்வே திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி போக்குவரத்து அமைச்சினால் நியமிக்கப்பட்டார். இதன்படி, இன்றுமுதல் அமுலாகும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டது.
இது தொடர்பான உத்தியோகப்பூர்வ கடிதம் போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த நிலையிலே, புதிய பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இதேவேளை, இலங்கை மின்சார சபையின் புதிய ஊடகப் பேச்சாளராக பொறியியலாளர் நோயல் பிரியந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த முதலாம் திகதிமுதல் அமுலாகும் வகையில் மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் பொறியியலாளர் கலாநிதி நரேந்திர சில்வாவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.நோயல் பிரியந்த மின்சார சபையில் 28 வருட அனுபவமுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|