வங்காள விரிகுடாவில் திடீர் மாற்றம்! வளிமண்டவியல் திணைக்களம் !

Tuesday, November 29th, 2016

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதனால் எதிர்வரும் 28 மணித்தியாளங்களுக்கு கடல் பகுதிக்கு அருகில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக கடல் பிரதேசங்களில் கடுமையான மழை பெய்யக்கூடும் எனவும், இது தொடர்பில் மீன்பிடி மற்றும் கடற்படை சமூகம் அவதானமாக செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணியக ஊழியர் கசுன் பெஸ்குவேல் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அவசர எச்சரிக்கை டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை செல்லுபடியாகும் என வளிமண்டளவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

7eff9995fb277a0090c5d5247269ff3a_XL

Related posts: