தபால் மூலம் வாக்களிப்பு: அடையாள அட்டையை சமர்பித்தல் அவசியம் — தேர்தல்கள் ஆணைக்குழு!

Wednesday, October 23rd, 2019

ஜனாதிபதி தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்கும் அரச ஊழியர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டையை சமர்பித்து தம்மை உறுதிப்படுத்திக்கொள்வது மிக முக்கியம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய தேசிய அடையாள அட்டை, செல்லுப்படியான சாரதி அனுமதி பத்திரம், செல்லுப்படியான கடவுச்சீட்டு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை அதேபோல் அடையாள அட்டை இலக்கம் பொறிக்கப்பட்ட ஊழியர் அடையாள அட்டை போன்ற உத்தியோகபூர்வ ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுள்ளது.

ஊழியர் அடையாள அட்டைகளை பயன்படுத்தி தபால் மூலம் வாக்களிக்க முடியும் என்ற போதிலும் அதனை வழங்கும் வாக்காளரின் அடையாளத்தை வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பு கடமைகளுக்கு பொறுப்பான அதிகாரி அதனை உறுதிபடுத்தி சரிபார்க்க வேண்டும்.

இது சம்பந்தமாக அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உரிய தரப்பினருக்கு அறிவித்ததல் வழங்கியுள்ளது.

Related posts: