இரசாயன பசளைகள் – பூச்சிக்கொல்லிகளை சந்தையில் நிரம்பல் செய்ய அரசாங்கம் உத்தரவு!

மறைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இரசாயன பசளைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை வர்த்தகர்கள் சந்தையில் நிரம்பல் செய்யுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இரசாயன பசளைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்வது அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டதால், மறைக்கப்பட்ட பங்குகளை வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
பசளை வர்த்தகர்கள் ஆரம்பத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பசளைகளை அதிக விலைக்கு விற்க மறைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வர்த்தகர்கள் தங்களால் மறைக்கப்பட்ட இரசாயன பசளைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை மொத்த சந்தையில் நிரம்பல் செய்யுமாறு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரையில் டெங்கு காய்ச்சலால் 4700 பேர் பாதிப்பு!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 115: ஒருவர் மரணம் : 9 நோயாளிகள் குணமடைந்தனர் - தேசிய தொற்ற...
|
|