இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் !

அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்கப்பெற்று பசிக் கொடுமையில் இருந்து அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பதே உலக வறுமை ஒழிப்பு தினத்தின் பிரதான நோக்கமாகும் .
உலகில் எங்கோ ஒரு இடத்தில் வறுமையால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவரது மனித உரிமை மீறப்படுகின்றது என பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோசபர் ரெசின்கி கூறினார். இவர் சிறுவயது முதலே வறுமைக்கு எதிராக போராடி உலக வறுமை ஒழிப்பு தினமாக 1987ம் ஆண்டு அக்டோபர் 17ல் ஐ.நா சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
உணவு ,உடை, வசிப்பிடம், சுத்தமான நீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் பெறும் மரியாதை என்பன வாழ்க்கைத்தரத்தை தீர்மானிப்பதாக அமைக்கின்றது. இவற்றை இழந்தவர்களையே வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களாக கணிக்கின்றோம்.
இதனை இல்லாதொழிக்க விவசாயத்தை அதிகரித்து உணவு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்து நாட்டில் வறுமை நிலையினை குறைத்துக் கொள்ளலாம்.
Related posts:
மீள்குடியேற்றத்தை நான் பார்த்துக் கொள்வேன் - சொல்கின்றார் அமைச்சர் சுவாமிநாதன்!
2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டமொன்றை கொண்ட...
இந்திய அரசாங்கம் நிதியுதவி - ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 10,000 வீ...
|
|