அத்தியாவசிய பொருட்களின் விலைக்குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்தில் !
Thursday, October 15th, 2020
பருப்பு, சீனி, பெரிய வெங்காயம், ரின் மீன் ஆகியவற்றின் இறக்குமதி வரியை நேற்று முன்தினம்முதல் நீக்கியமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்திற்கு கிடைக்க பெற்றுள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உடனடியாக குறைக்க முடியாது என அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்களின் சங்கத்தின் தலைவர் ஜீ.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கையிருப்பில் உள்ள பொருட்கள் முடிவடையும் வரை பொருட்களின் விலையை குறைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய வாழ்க்கை செலவு மற்றும் கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு பருப்பு, ரின் மீன், பெரிய வெங்காயம், சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரியை நேற்று முன்தினம் நள்ளிரவுமுதல் அரசாங்கம் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீனா செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
கொரோனா வைரஸ்: தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்!
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரிக்க் வாய்ப்பு - பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் த...
|
|
|


