சீனா செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
Sunday, August 6th, 2017
15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று அடுத்தவாரம் சீனாவுக்கு செல்ல உள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்
இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நேற்று சீனாவால் டிஜிட்டல் உபகரணங்கள் வழங்கப்பட்ட நிகழ்வின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக சின்சுவா ஊடகம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காகவே அவர்கள் சீனா செல்கின்றனர். இந்த நிலையில், இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்த எதிர்பார்ப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையை சீனா வரவேற்பதாக இலங்கைக்கான சீனா தூதுவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
வங்காள விரிகுடாவில் “TITLI” என்ற பலமான சூறாவளி!
அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபடுங்கள் - தீபாவள...
ஜூலையில் மின் கட்டணம் குறையும் - மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
|
|
|


