நாடு முடக்கப்படுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை வெளியாகும் என எதிர்பார்ப்பு!

Thursday, August 19th, 2021

நாட்டை முழுமையாக முடக்குவதா? அல்லது தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்குவதா? என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம், நாளை வௌ்ளிக்கிழமை எடுக்கப்படுமெனத் செய்திகள் வெளியாகியுள்னன.

ஜனாதிபதி கோட்டாயபய ராஜபக்ஷ தலைமையில், கொவிட்-19 செயலணி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் கூடி ஆராயப்படுவது வழமை.. அந்தவகையில், நாளையதினமும் அந்த செயலணி கூடவுள்ளது.

இதன்​போது சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளுக்கு அமையவே, அடுத்தக்கட்டத் தீர்மானங்கள் எட்டப்படவுள்ளன.

ஒரு வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு மல்வத்து ,அஸ்கிரிய பீடங்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன.

அதேபோல ஆகக் குறைந்தது மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தின் பங்காளிகட்சிகளில் பத்து கட்சிகள், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தன.

இந்நிலையில், கொரோனாத் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்குமாறு மற்றுமொரு பங்காளியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இன்றையதினம் கோரியுள்ளது.

இதகிடையே சுகாதார தரப்பினரும் இது குறித்து பல அறிவுறுத்தல்களை விடுத்துவருகின்றன. இன்நிலையில் நாளையதினம் கூடவுள்ள கூட்டத்தின்போது இவ்வீடயம் தொடர்பான இறுக்கமான தீர்வு ஒன்று எட்டப்பட வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: