அரச ஊழியர்களுக்கு ஏம்பரல் 10ஆம் திகதிக்கு முன் சம்பளம்!

Friday, March 27th, 2020

அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் மாத ஊதியம் 10ம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நிதி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. அத்துடன், ஓய்வூதிய கொடுப்பனவுகள் 3ம் திகதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில், கொரோனா வைரஸ் பரவலை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையினை கருத்திற்கொண்டு அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதுடன், பல திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. இந்நிலையிலேயே, தற்போது அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் மாத ஊதியம் 10ம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது

Related posts:


க.பொ.த உயர்தர பரீட்சை- அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன்!
குறைந்த விலையில் 50 அத்தியாவசிய பொருட்கள் – இன்றுமுதல் சதொச விற்பனையகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் ...
பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடைய...