இன்றுமுதல் விரிவுபடுத்தப்படும் போக்குவரத்து சேவைகள் – புகையிரத திணைக்களம் அறிவிப்பு!

Monday, June 1st, 2020

இன்றுமுதல் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலிருந்து கொழும்பிலுள்ள அரச மற்றும் தனியார் பிரிவுகளில் சேவையாற்றுபவர்களுக்காக 37 விசேட தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்றையதினம் மட்டும் புகையிரதங்களில் பணியிடங்களுக்கு செல்வதற்காக 19 ஆயிரத்து 593 பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு இதன்போது முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதோடு தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் சேவையாற்றுபவர்கள் தமது அலுவலகத்திற்கான அடையாள அட்டைகளை காண்பித்து தொடருந்துகளில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வழமை போன்று பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளன.

இந்தநிலையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சுமார் 4 ஆயிரம் பேருந்துகளில் வெவ்வேறு தொழிநுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாள்ர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த பேருந்துகளுக்கு காப்பீட்டு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சிடம் கோரப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts: