காம்பியாவில் இருமல் மருந்தை உட்கொண்ட 66 குழந்தைகள் உயிரிழப்பு – விசாரணைகளை ஆரம்பித்தது உலக சுகாதார நிறுவனம்!

Friday, October 7th, 2022

காம்பியாவில் 66 குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு இந்திய இருமல் மருந்து காரணமாக இருக்கலாமாவென உலக சுகாதார நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.  இதற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமற்ற 04 இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாமென உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்ச்சல், தடிமன் மற்றும் இருமலை குணப்படுத்துவதற்காக மருத்துவ பரிந்துரைக்கமைய வழங்கப்பட்ட இந்திய மருந்து நிறுவனம் ஒன்றின் பாணி மருந்தை இச்சிறுவர்கள் அருந்தியுள்ளனர்.

இதனால்,காம்பியா நாட்டைச் சேர்ந்த 66 சிறார்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Maiden Pharmaceuticals என்ற இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த நான்கு மருந்துகளை அருந்திய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வறிய நாடான காம்பியாவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளே பயன்பாட்டிலுள்ளன.

Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup மற்றும் Magrip N Cold Syrup ஆகிய இந்திய மருந்து நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளே அங்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சிறார்கள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் துரிதமான விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: