தீயினால் பாதிக்கப்பட்l கிரேக்க அகதிகள் முகாமுக்கு கூடுதல் போலிசார்!

Tuesday, September 20th, 2016

நேற்று(19) மோரியா அகதிகள் முகாமின் பெரும் பகுதியை ஒரு பெருந்தீ அழித்துவிட்ட பிறகு, கிரேக்கத்தில் உள்ள லெஸ்போஸ் தீவுவுக்கு கூடுதல் போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த தீ ஏற்பட காரணம் என்னவென்பது இன்னமும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், இதனால் அகதிகள் முகாமில் வசித்து வந்த ஆயிரக்கணக்கானோர் தங்களின் கூடாரங்கள் மற்றும் முகாம்களிலிருந்து தப்பியோட வேண்டியிருந்தது.

கிட்டத்தட்ட 6000 பேர் வரை வசிக்குமாறு கட்டப்பட்ட இந்த முகாமில் உள்ள வாழ்க்கை நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், தஞ்சம் கோரி தாங்கள் அளித்த விண்ணங்களின் மீதான பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் கால அளவு குறித்து இங்குள்ள பல அகதிகள் விரக்தியடைந்துள்ளதாகவும் ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிரியா நாட்டை சேர்ந்த குடியேறிகள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கவில்லையென்றால், அவர்கள் துருக்கிக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற ஐரோப்பிய ஆணையம் மற்றும் துருக்கி இடையிலான ஒப்பந்தத்திற்கு பிறகு, மோரியா முகாம் ஒரு தடுப்புக் காவல் மையமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 _91311452_fire

Related posts: