இந்திய ஒயில் நிறுவனத்திடமிருந்து குதங்களை மீளப்பெறும் நடவடிக்கை ஒத்திவைப்பு!

Tuesday, January 17th, 2017

இந்தியன் ஒயில் நிறுவனத்துக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்ட சீனக்குடா எண்ணெய்க் குதங்களில் மூன்றரை, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பயன்பாட்டுக்கு வழங்கும் முடிவை பிரதமர்  ரணில் விக்ரமசிங்க இடைநிறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது .

இந்தியாவின் இல்ஙகைக்கான புதிய தூதுவர் பணிகளைப் பொறுப்பேற்கும் வரையில், இந்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு ரணில் அறிவுறுத்தியுள்ளார்.

பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே தலமை அமைச்சர் இந்த அறிவுறுத்தலை விடுத்தார். குத்தகைக்கு வழங்கப்பட் எண்ணெய்க் குதங்களில் மூன்றரை மீளவும் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்வது குறித்து, புதிய இந்தியத் தூதுவருடன் பேச்சு நடத்த வேண்டியிருப்பதாலேயே ரணில் இந்த அறிவுறுத்தலைப் பிறப்பித்துள்ளார். என்று பெற்றோலியக் கூட்டுத்தாபன மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மின்சார உற்பத்திக்காக எரிபொருளைச் சேமித்து வைப்பதற்கு அவசரமாக 3 எண்ணெய்த் தாங்கிகள் தேவைப்படுவதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

blogger-image-1075572354

Related posts:

விஷேட கூட்டத்தில் நிதிக்குழு அறிக்கை விவாதிப்பு முரணானது: மாநகரின் தவறை சுட்டிக்காட்டியது ஈ.பி.டி.பி...
வருமான வரிசட்டங்களை சாதாரண முறையில் நடைமுறைபடுத்த வேண்டும் - யாழ் மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்க...
வடக்கிற்கு புதிய பொருளாதார திட்டம் - அபிவிருத்தியின் வேகம், மக்களின் அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது –...