விஷேட கூட்டத்தில் நிதிக்குழு அறிக்கை விவாதிப்பு முரணானது: மாநகரின் தவறை சுட்டிக்காட்டியது ஈ.பி.டி.பி!

Friday, December 7th, 2018

கடந்த நிதிக்குழு கூட்ட அறிக்கையை வழமைபோல பரிசீலனைக்கு எடுப்பது அவசியமன்று எனவே நிதிக் குழு கூட்ட அறிக்கை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட குழறுபடிகள் காரணமாக இந்த விசேட கூட்டத்தில் விவாதிக்க முடியாது. அந்தவகையில் மாதாந்த பொதுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய நிதிக்  கூட்ட அறிக்கையை விசேட பொதுக் கூட்டத்தில் ஆராய முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இன்றையதினம் யாழ் மாநகரின் 2019 வரவு செலவு திட்டம் தொடர்பிலான கூட்டம் முதல்வர் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது 8 ஆவது நிதிநிலைக் கூட்டத்தின் அறிக்கை ஆராயப்படுவதற்கு சபையில் முன்மொழியப்பட்டது.

இதன்போதே குறித்த விடயத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

குறித்த விடயம் சபையில் விவாதிக்கப்பட்டபோது சிறிது நேரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களான முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, பிரபல சட்டத்தரணி றெமீடியஸ், இரா செல்வவடிவேல் ஆகியோர் முதல்வருடன் கடுமையாக விவாதித்தனர்.

இதன்போது விசேட கூட்டம் கூட்டப்படும் சந்தர்ப்பங்களாக சபையின் குறைந்தது மூன்று உறுப்பினர்கள் கோரியிருந்தால் அல்லது இதர விசேட தேவைகருதியே கூட்டப்படும்.

அந்தவகையில் நிதிக்குழு கூட்ட அறிக்கையை இந்த விஷேட பாதீட்டு குழு கூட்டத்தில் ஆராயப்படத் தேவையில்லை. அத்துடன் முறையாக சமர்ப்பிக்கப்படாத குறித்த நிதிக் குழு அறிக்கை மற்றும் பாதீட்டு முன்மொழிவு இருப்பதால் இதை இச்சபையில் விவாதிக்கவே முடியாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மக்களுக்கு சேவை செய்ய இருக்கும் இந்த சபையின் உறுப்பினர்கள் எந்தவகையிலும் மக்களின் நலன்களை புறக்கணித்து செயற்பட முடியாது. மக்களது வரிப்பணத்தில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் தேவையற்ற விடயங்களை முன்வைகலாகாது என வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: