இந்தியா செல்கிறார் வெளிவிவகார அமைச்சர் மங்கள!
 Monday, May 30th, 2016
        
                    Monday, May 30th, 2016
            இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாக மும்பையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள கருத்தரங்கில், பங்கேற்க இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியா செல்லவுள்ளார்.
வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாக இந்தியா நடத்தும் முதலாவது பிரதான கருத்தரங்கு வரும் ஜூன் 13ஆம், 14ஆம் நாள்களில் நடைபெறவுள்ளது. இந்தியாவின் நுழைவாயில் கலந்துரையாடல் என்ற பெயரில் நடத்தப்படவுள்ள இந்தக் கருத்தரங்கை இந்திய வெளிவிவகார அமைச்சும் கேட்வே இல்லமும் இணைந்து ஒழுங்கு செய்துள்ளன.
இந்தக் கருத்தரங்கில் வெளிவிவகாரம் மற்றும் வர்த்தகம் சார்ந்த விவகாரங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், நேபாள பிரதிப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான கமல் தாபாவும் இந்தக் கருத்தரங்கில் ஆரம்ப உரை நிகழ்த்தவுள்ளனர். இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.
Related posts:
இந்தியாவுடன் பாரம்பரிய மருத்துவ முறைகளை பரிமாறிக்கொள்ள  ஒப்பந்தம்!
700 ரூபாவை கடந்த வெங்காயத்தின் விலை!
போக்குவரத்து அபராத கட்டணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக் காலம் இன்றுடன் நிறைவு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        