இந்தியாவில் இருந்து 5 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!
Thursday, February 25th, 2021
இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா – செனெகா கொவிட் -19 தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
தடுப்பூசிகளை ஏற்றிவந்த விமானம் இன்றையதினம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிரங்கியதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை ஔடத கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய சீரம் நிறுவனம் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் இந்த தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
முன்பதாக கடந்த 28ஆம் திகதி இந்தியாவிடம் இருந்து இலவசமாக 5 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைப் பெற்றுக்கொண்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 29 ஆம் திகதிமுதல் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், இதுவரையில், 3 இலட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


