நான்காம் மாடிக்கு மேல் கட்டடம் நிறுவ அனுமதியளிக்க யாழ்ப்பாண மாநகர சபைக்கு அதிகாரம் கிடையாது  !

Friday, February 3rd, 2017

4ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட நிலப்பரப்பு மற்றும் 4 மாடிக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு யாழ்ப்பாண மாநகரசபை அனுமதி வழங்க முடியாது. நகர அபிவிருத்தி அதிகாரசபையே அனுமதி வழங்க முடியும். என யாழ்.மாநகர சபைக்கு கொழும்பு அரசின் நிர்வாகத்தின் கீழான நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நேற்றையதினம் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாகாண நிர்வாகததிற்கு உட்பட்ட யாழ்.மாநகரசபை மாத்திரமே வடக்கில் உள்ள ஒரே ஒரு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நிர்மாணிக்கப்படும் சகல கட்டடங்களுக்குமான அனுமதி யாழ்.மாநகரசபையினாலேயே வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென மாநகர சபையின் அனுமதி வழங்கலுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 4ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் அபிவிருத்தி வேலை மற்றும் 4மாடிக்கு மேற்பட்ட கட்டடங்கள் அமைப்பதற்கு யாழ்.மாநகர சபை அனுமதி வழங்க முடியாது எனவும் கொழும்பு அரசின் நகர அபிவிருத்தி அதிகார சபையே அனுமதி வழங்க முடியும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் அறிவுறுத்தலுக்கான காரணம் வெளியாகவில்லை.

1380086602jaffna-municipal

Related posts: