இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில்!
Monday, August 15th, 2022இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று (15) காலை 9 மணிக்கு இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றிவைத்தார்.
இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தார்.
இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நெடுந்தீவு கடலில் மீன்பிடித்த மீனவர்களுக்கு விளக்கமறியல்!
புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு - ஆயுர்வேத மருத்துவத்தை எதிர்பார்ப்பவர்களின் அபிலா...
148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு!
|
|
|
நெருக்கடி நிலைக்குப் பின்னர் சமகால அரசாங்கம் பல நிவாரணங்களை மக்களுக்கு வழங்கியுள்ளது - அரசாங்கத் தகவ...
நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரிப்பு - வெரிட்டே ரிசர்ச...
பெரும்போக நெற்பயிர் செய்கை - உரக்கொள்வனவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக விவசாயிகளின் கணக்குகளில் 9.6 ப...


