நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரிப்பு – வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரிவிப்பு!

Thursday, July 6th, 2023

அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெரிட்டே ரிசர்ச் (Veritங Research) நிறுவனம் ‘Mood of the Nation’ எனும் புதிய கருத்துக்கணிப்பொன்றை மேற்கொண்டது.

இந்தக் கருத்துக்கணிப்பின் பிரகாரம், 2023 பெப்ரவரி, 2022 ஒக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களிலும் அரசாங்கத்தின் மீதான மக்களின் திருப்தி நிலை 10 வீதமாகவே காணப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து மக்களிடத்தில் தற்போது திருப்தி அதிகரித்துள்ளதாகவும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 பெப்ரவரியில் 4 வீதமாகவும், 2022 ஒக்டோபரில் 7 வீதமாகவும் காணப்பட்ட அரசாங்கத்தின் மீதான மக்களின் திருப்தி நிலை மதிப்பீடு 2023 ஜூன் மாதத்தில் 21 வீதமாக இரட்டிப்பாகியுள்ளது என்றும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Veritங Research நிறுவனத்தின் இந்தக் கணக்கெடுப்பின் பிரகாரம், நாட்டின் பொருளாதாரத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையும் மதிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் குறித்த மக்களின் நம்பிக்கையை மதிப்பிடுவதற்கு பல்வேறு கேள்விகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் -100 முதல் +100 ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

000

Related posts:


கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக 100 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்றுறுதி - தேசிய மருத்துவ அதிகார...
அட்டவணைக்கு அமைய எரிபொருள் கிடைக்குமாயின் மின்விநியோகத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது - மின்சக்...
மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழா திருப்பலி நாளை - மன்னார் வருகின்றார் ஜனாதிபதி - விசேட பாதுகாப்பு ஏற...