நெடுந்தீவு கடலில் மீன்பிடித்த மீனவர்களுக்கு விளக்கமறியல்!

Wednesday, November 2nd, 2016

கடற்படையினரால் கைது செய்யப்பட இந்திய மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து  எதிர்வரும் 13ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

நெடுந்தீவில் தென்மேற்கு பிரதேச இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட  இந்த இந்திய மீனவர்கள் நால்வர் நேற்று அதிகாலை 1.00 மணியளவில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களின்  டோலர் படகு காரைநகர் இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்துக்கு கொன்டுவந்தபின் யாழ்ப்பாணம் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இலங்கை கடற்படையினரால் கச்சதீவு வடக்கு பிரதேச கடலில் சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போது 80 கிலோ கேரள கஞ்சா நேற்று (31) கைப்பட்டப்பட்டுள்ளது.

நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோது இவை கைப்பற்றப்பட்டதுடன் நான்கு பேர் கைதுசெய்யபட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது

கைது செய்யபட்ட கேரள கஞ்சாவுடன் கைதான அனைவரும் இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்துக்கு கொன்டுவந்த பின் யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட செயலணி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

b58b3441394e388c4dd396ffa361649c_XL

Related posts: