பெரும்போக நெற்பயிர் செய்கை – உரக்கொள்வனவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக விவசாயிகளின் கணக்குகளில் 9.6 பில்லியன் வைப்பிலிடப்பட்டதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவிப்பு!
Tuesday, February 6th, 2024
பெரும்போக நெற்பயிர் செய்கைக்கான உரக்கொள்வனவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக விவசாயிகளின் கணக்குகளில் 9.6 பில்லியன் ரூபா வரவு வைக்கப்பட்டுள்ளதாக, விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு ஹெக்டேயருக்கு 15 ஆயிரம் ரூபா வீதம் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மேலும் 450 மில்லியன் ரூபாவை விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கவுள்ள தாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிரதமர் மகிந்தவின் உடல்நலம் தொடர்பில் வெளியான தகவல் போலியானது - பிரதமர் அலுவலகம் அறிவிப்பு!
அதிகரித்துள்ள மின்சார கட்டணத்துக்கு நிவாரணம் வழங்க விசேட நடவடிக்கை - பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரி...
இவ்வாண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு - சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
|
|
|


