இணையத்தளமூடாக 15 வயது சிறுமி விற்பனை: விசேட வைத்தியரும் கைது!

கல்கிசையில் 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் செயற்பாடுகளுக்காக இணையத்தளமூடாக விற்பனை செய்தமை, கொள்வனவு செய்தமை மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் மேலும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் இன்று (06) அதிகாலை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் விசேட வைத்தியர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மற்றையவர் குறித்த சிறுமியை வெவ்வேறு நபர்களிடம் அழைத்துச் சென்ற 33 வயதான ஒருவராவார்.
சந்தேகநபர்கள் இருவரும் இன்று (06) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாகவம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்..
இதேநேரம் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதானவர்களில் மாலைதீவு பிரஜை ஒருவர், மிஹிந்தலை பிரதேச சபை உப தலைவர், பிரபல வர்த்தகர் ஒருவர், மதகுரு ஒருவர், கப்பல் கப்டன் மற்றும் கப்டனின் உதவியாளர் ஒருவர் மற்றும் சிறுமியின் தாய் உள்ளிட்டோர் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|