இடை தரங்களுக்கு மாணவர்களை உள்ளீர்க்க புதிய பொறிமுறை – அமைச்சரவையும் அங்கீகாரம்!

Tuesday, January 3rd, 2023

பாடசாலைகளில் தரம் 6 தவிர்ந்த 2 ஆம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரைக்கும் வகுப்புகளுக்கு மாணவர்களை உள்ளீர்த்துக் கொள்வதற்கான புதிய பொறிமுறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதற்காக தற்போது நடைமுறையில் உள்ள சுற்றறிக்கை ஏற்பாடுகளை மேலும் ஒழுங்குமுறைப்படுத்தப்படவுள்ளது.

இடைத்தரங்களில் பாடசாலையை மாற்றுவதற்கு உண்மையான தேவையுடையவர்களை அடையாளங்கண்டு, அனைத்து மாணவர்களுக்கும் நியாயமானதும் சமமானதுமான வாயப்புக்கள் கிடைக்கும் வகையில் இந்த புதிய பொறிமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தற்போது காணப்படுகின்ற 1 முதல் 5 ஆம் தரம்வரைக்கும் ஒரு வகுப்பில் உயர்ந்தபட்ச மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆகவும், 6 முதல் 11 ஆம் தரம்வரைக்கும் ஒரு வகுப்பிற்கு உயர்ந்தபட்ச மாணவர்களின் எண்ணிக்கை 45 ஆகவும் பராமரித்துச் செல்லல் உள்ளிட்ட யோசனைகளுடன் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: