எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை: சாவகச்சேரியில் 25 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

Wednesday, August 11th, 2021

யாழ்.சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நடத்தப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வரணியில் சமுர்த்தி வங்கி ஊழியர் ஒருவர், பனை அபிவிருத்திச் சபை ஊழியர்கள் உட்பட்ட 17 பேருக்கு வரணிப் பகுதியில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் சாவகச்சேரிப் பகுதியில் எண்மருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் தென்மராட்சி கிழக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க சிற்றுண்டிச்சாலையின் ஊழியர் ஒருவர், கைதடி முதியோர் இல்லத்தில் பணியாற்றும் ஒருவர், பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் தேர்த் திருவிழாவில் பங்கேற்றிருந்த நிலையில் அங்கு தொற்றாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அங்கிருந்துவந்து கைதடிப்பகுதியில் தங்கியிருந்த இளைஞர் உட்பட்டவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிவையில் தென்மராட்சி கிழக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க சிற்றுண்டிச்சாலை நகரின் பெருமளவான வர்த்தகர்களும் மக்களும் சென்றுவருகின்ற சிற்றுண்டிச்சாலை என்பதால்  அங்கு சென்றுவருபவர்களை அவதானமாக செயற்படுமாறு சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியிருக்கின்றனர். அத்துடன் சிற்றுண்டிச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: