1490 மீனவர்களுக்கு TAB கணனிகள்!

Tuesday, March 28th, 2017

மீனவர்களுக்கு E-LOG BOOK என்ற TAB கணனிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

டெப் கணனிகளை கொள்வனவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்த மூன்று மாத காலத்திற்குள் அவை மீனவ சமூகத்திற்கு பெற்றுக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆயிரத்து 490 மீனவருக்கு டெப் கணனிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கென அரசாங்கம் சுமார் 15 கோடி ரூபாயை செலவிடுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த டெப் கணனிகள் நீருக்கடியிலும் எந்தப் பாதிப்புமின்றி குறிப்புகளை பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கடற்பரப்பில் பிடிக்கப்படும் மீன்கள் தொடர்பான தரவுகளை இலங்கை மீனவர்கள் சரியான முறையில் பேணவில்லை என்று இலங்கை மீதான மீன்பிடித் தடையை விதித்தபோது, ஐரோப்பிய ஒன்றியம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கமைய அரசாங்கம் இந்த புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

மீன்கள் பிடிக்கப்படும்போது, அது தொடர்பான விபரங்களை பதிவு செய்து கொள்ள முடியும். இதன் மூலம் மீனவர்கள் மீன்தொகை பற்றிய கணக்கு தரவுகளை சரியாக பேண முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts: