இரட்டை குடியுரிமையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிக்கலும்!  

Tuesday, May 9th, 2017

இரட்டை குடியுரிமை பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பின் நிர்வாக அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சட்டங்களை உருவாக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரட்டை குடியுரிமை இருக்கின்றமையாலேயே இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றன. தகவலறியும் சட்டம் மூலத்தின் கீ்ழ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விரைவில் தகவல் அறியப்படும் என்றும், இரட்டை குடியுரிமை தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இரட்டை குடியுரிமை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர்களுக்கு இலங்கை குடியுரிமை மாத்திரமே இருக்க வேண்டும் என ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: